தாமிரபரணி கரையோர பழமையான மண்டபங்கள் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.கழிவு நீர் கலப்பை தடுக்க பாதாள சாக்கடை பணிகளை தீவிரபடுத்தவும் நடவடிக்கைகள் தீவிரபடுத்துபட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நெல்லை மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தாமிரபரணி நதி சுத்திகரிப்பு தொடர்பாக பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் எழுப்பிய கேள்விக்கு மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா பதிலளிக்கையில், நெல்லை மாநகர பகுதியில் தாமிரபரணி ஆறு 14 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதாகவும்,
ஆற்றை பாதுகாக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆற்றங்கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகரில் 23 இடங்களில் சாக்கடை கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், ஆற்றங்கரையில் உள்ள பழமைவாய்ந்த மண்டபங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், நெல்லை மாநகர பகுதியில் கடந்த 22-ம் தேதி வரை 106 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட 3 பேரும் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தவர்கள் என்றும், சாதாரண காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் பகுதிகள் குறித்து கணக்கெடுத்து, அந்த பகுதிகளில் தூய்மை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக