திருவண்ணாமலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவுப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 அக்டோபர், 2026

திருவண்ணாமலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவுப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள்.


திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் கைஉறை மற்றும் முக கவசம் இன்றி, அபாயகரமான சூழ்நிலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உடல்நலனைப் பாதுகாப்பதற்கான கையுறைகளோ அல்லது முக கவசங்களோ அணியாமல் திறந்தவெளியில் குப்பைகளை அகற்றி வருகின்றனர். இது இவர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, நோய் தொற்றும் அபாயத்தை உருவாக்குகிறது.  
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை (PPE Kits) வழங்க வேண்டும் எனவும், பாதுகாப்பு வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad