பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையத்தால் பொதுமக்கள் பாதிப்பு உடனடி நடவடிக்கை கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 அக்டோபர், 2026

பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையத்தால் பொதுமக்கள் பாதிப்பு உடனடி நடவடிக்கை கோரிக்கை.


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் பவர் பிளான்ட் அனல் மின் நிலையம் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

இந்த மின் நிலையத்திற்காக தங்களது விளைநிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை உறுதி அளித்தபடி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பல் கழிவுகளால், சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தினமும் சுவாசக் கோளாறு, இருமல், கண் எரிச்சல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் உடனடியாக இந்த பகுதியில் ஆய்வு செய்து,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
 நிலம் கொடுத்தவர்களுக்கு உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலையின் மாசு கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்ற வைக்க வேண்டும்.

என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


P ஜெகதீசன்
தமிழக குரல் கடலூர் மாவட்டம் இணையதள செய்தி பிரிவு மாவட்ட ஒளிப்பதிவாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad