பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 அக்டோபர், 2026

பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா.


திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில், செய்யாறு நகர லயன்ஸ் சங்கம் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சேவை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ். மோகன் தலைமை வகித்தார். பெருங்கட்டூர் ஊர்புற நூலக நல்நூலகர் ஜா. தமீம் அனைவரையும் வரவேற்றார்வரவேற்றார். லயன்ஸ் சங்கச் செயலாளர் கே. குணசேகரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் எம். புகழேந்தி மற்றும் தொழிலதிபர் தில்லை கார்த்தி ஆகியோர் வாழ்த்தி, விருதுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புரையில் பாவலர் சா. சரவணன், உலக சாதனையாளர் மா. சுந்தரமூர்த்தி மற்றும் நல்லாசிரியர் அ. முபாரக் ஆகியோர் அப்துல் கலாமின் வாழ்க்கை, சாதனைகள் மற்றும் இளைஞர்களுக்கான அவரது வழிகாட்டுதல்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16 பேருக்கு சேவை விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளைப் பெற்றவர்கள் தங்களது ஏற்புரையில் விழா ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், நூலக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழிலதிபர் தில்லை கார்த்தி, மாவட்டத் தலைவர் எம். புகழேந்தி, லயன்ஸ் சங்கச் செயலாளர் கே. குணசேகரன் மற்றும் பாவலர் சா. சரவணன் ஆகியோர் தலா ரூ.1,000 வழங்கி நூலகப் புரவலர்களாக இணைந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க மாவட்ட சேவைத் தலைவர் தி. வடிவேல் செய்திருந்தார். விழாவின் இறுதியில் நன்றியுரை வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad