ஒன்றியக் கூட்டத்தில்நெகிழ்ச்சியான தருணம்!பதவிக்கால நிறைவு ஆலோ சனைக் கூட்டத்தில் உயிரிழந்த ஒன்றி யக் குழு உறுப்பினருக்கு மௌன அஞ்சலி!
குடியாத்தம், அக்டோபர் 16 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம்நிறைவடைவதையொட்டி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து, உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஒன்றியக் குழு உறுப்பி னருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலிசெலுத்தினர். இக்கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் முரளி முன்னிலை வகித்து அனைவ ரையும் வரவேற்றார். சிறப்பு அழைப் பாளராக நகர மன்றத் தலைவர் எஸ். சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இதில் குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சித் தலைவர் கள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழுத் தலைவர் என்.இ. சத்யானந்தம், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கட்சிப் பாகுபாடு களைக் கடந்து, மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட்டதாகக் குறிப்பிட்டார்.குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, தெருவிளக்கு வசதி கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவை களையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனைவரும் இணைந்து பணியாற்றியதை நினைவுகூர்ந்தார். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று, தொடர்ந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து, ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங் கள் பெற்ற அனுபவங்களைப் பகிர் ந்து கொண்டனர். தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வட்டார வளர் ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித் தனர்.பதவிக்கால நிறைவையொட்டி நடைபெற்ற இக்கூட்டம், கடந்த ஐந்து ஆண்டுகால மக்கள் பணிகளை நினைவுகூர்ந்தும்,உயிரிழந்த உறுப்பி னருக்கு அஞ்சலி செலுத்தியும் நெகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக