தூத்துக்குடி மாவட்டத்தில் 1435-ம் ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 02.06.2026 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை, அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக