படப்பை, மே 30, 2026 (வைகாசி 16):
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், படப்பை பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாநில அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குன்றத்தூர் வட்ட சிபிஐ(எம்) செயலாளர் கே. அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில அரசின் கொள்கைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வில் சிபிஐ(எம்) காஞ்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ரமேஷ் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து காஞ்சி மாவட்டக் குழு உறுப்பினர் பி. தேவி சிறப்புரையாற்றி, மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் வட்டக்குழு உறுப்பினர்களான தோழர் திருஞானம், தோழர் சண்முகபாபு, தோழர் கார்த்திக் மற்றும் தோழர் சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் வட்டக்குழு உறுப்பினர் கே. மூர்த்தி நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக