நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ 2 லட்சத்தி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் !
10 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களு க்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா
குடியாத்தம் , ஜூன் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஸ்ரீ அபிராமி மகளிர் கலை கல்லூரியில் அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி அள வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி கல்வி ஊக்கத் தொகையையும் மற்றும் நலிந்தோருக் கான நலத்திட்ட உதவிகளையும் வழங் கும் விழா சிறப்பாக தமிழ் தாய் வாழ்த்து டன் மாலை 3.30 மணிக்கு துவங்கி நடைபெற்து விழாவில் ACRPF அமைப் பின் மாநில தலைவர் மக்கள் சேவகர் L. அப்பாதுரை அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றினார். வேலூர் மாவட்ட அளவில் கடந்த பொது தேர்வில் பத்தாம் மற்றும் 12ம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவி களை பாராட்டி ஊக்க தொகையாக ரூபாய் 5000 மும் இரண்டாம் இடம் பெற்ற வர்களுக்கும் ரு.4000 ம் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கும் ரு3000 ம் என 10 மாணவ மாணவிகளுக்கு வழங்கியும் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார் மேலும் சிறப்பான கல்வி சேவையை வழங்கிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொளரவப்படுத்தி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து ஷீல்டு வழங்கபட்டது. மேலும் நலிந்த மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள் என 40 குடும்பத்தினருக்கு ஊட்டச்சத்து மற்றும் மளிகை பொருட்கள் ஒரு குடும்பத்தினரு க்கு ரூபாய் 3000 மதிப்பில் வழங்கினார். மேலும் கல்வி உதவியாக மாணவர்களு க்கு புத்தகப்பை மற்றும் நோட்டு புத்தகங் கள் உபகரணங்கள் வழங்கினார் மேலும் 100க்கும் அதிகமான பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூதாட்டிகளுக்கு புடவை வழங்கி விழாவில் அனைத்து நுகர்வோர் உரிமைகளும் பாதுகாக்கபட வேண்டும் என்று தெரிவித்து மாநில தலைவர் திரு.L.அப்பாத்துரை அவர்கள் சிறப்புரையாற்றினார் விழாவின் துவக் கமாக பரதநாட்டியத்துடன் வேலூர் மாவட்ட ACRPF தலைவர் P.குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேலும் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் A.பன்னீர்செல்வம் அவர்களும் மாநில துணை செயலாளர் G.சேகர், ஸ்ரீ அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி சேர்மன் அவர்களும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பு செய்தார்கள். நிகழ்வின் இறுதியாக வேலூர் மாவட்ட ACRPF அமைப்பின் மாவட்ட துணை தலைவர் M.விஜயகுமார் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் குடியாத்தம் பகுதி கல்வியா ளர்கள், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் M.சேகர்
திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரியரும் கம்பன் கழக பட்டிமன்ற பேச்சாளரும் ஆகிய தமிழ் திருமால், ACRPF அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சுபாஷ், தர்மபுரி மாவட்ட தலைவர் நாகமணி, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் U.சேட்டு, செயலாளர் இளவரசி, பல்வேறு மாவட்ட நிர்வாகி கள் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என 500 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்தனர். வேலூர் ACRPF வேலூர் மாவட்ட பொருளாளர் திரு. A.மதிவாணன் மற்றும் மாவட்ட செயலாளர் G.சிவகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் இறுதி யில் வந்திருந்த அனைவரும் தேசிய கீதம் பாடி விழாவை நிறைவு செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக