குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலே யே ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் !
குடியாத்தம் ஜூன் 19
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், செருவங்கி கிராமம், கார்த்திகேய புரம் பகுதியில், 19.06.2026 அன்று மாலை 4.45 மணியளவில் ரங்கசமுத்திரம் கிராமத் தைச் சேர்ந்த் செல்வம் (வயது-57) த/பெ சின்னசாமி என்பவரும், சதாம் வயது-26 என்பவரும் ஆம்பூர் – குடியாத்தம் சாலை யில் கார்த்திகேயபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் . செல்வம் என்பவருக்கு தலையில் அடிபட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சதாம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேலூர்- அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். செல்வம் என்பவர் இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் எனவும், மாற்றுத்திறனாளி எனவும், இவருக்கு குப்பம்மாள் என்கிற மனைவியும் ராஜேஷ் என்கிற மகனும் உள்ளதாக விசாரணையில் தெரியவரு கிறது. மேலும் உடல் உடற்கூராய்விற் காக குடியாத்தம் அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளர் மூலம் வழக்கு . பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக