தனியார் பேருந்து ஓட்டுனரின் கவன குறைவுவால் பள்ளி மாணவி சாலை தடுப்பு சுவர் இடையே சிக்கி தவிப்பு !
ராணிப்பேட்டை , ஜுன் 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பேருந்து கள் அனைத்தும் பேருந்து நிலையத்தின் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய சர்வீஸ் சாலையில் போதிய இட வசதிகள் இல் லாத நிலையில் பேருந்துகள் அனைத்தும் வந்து பயணிகளை ஏற்றி கொண்டு குறு கிய இடத்தில் திரும்பி எதிர்சாலையில் சென்று வருகின்றனர் இந்த நிலையில் தனியார் பேருந்து ஒன்று ஆற்காடு பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் சோளிங்கர் நோக்கி செல்வதற்கு குறுகிய இடத்தில் பேருந்து திருப்பிய போது சாலையின் நடுவே இருந்த தடுப் பின் அருகாமையில் நடந்து சென்ற தனியார் பள்ளி மாணவி இருப்பதை கவனிக்காமல் பேருந்து இயக்கியதால் மாணவி பேருந்து மற்றும் சாலை நடுவே இருந்து தடுப்புக்கு இடையே சிக்கி அலறி கூச்சலிட்டு உள்ளார் இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக பேருந்தை நிறுத்த செய்து பேருந்து மற்றும் தடுப்பு சுகருக்கு இடையில் சிக்கிய மாணவியை பத்திரமாக மீட்டெடுத்தனர் இந்த விபத்து சம்பவத்தில் மாணவிக்கு பெரியஅளவில் எதுவும் காயங்கள் ஏற்படவில்லை இருப் பினும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்து னர் அலட்சியமாக பேருந்து இயக்கி இருக்கும் சம்பவத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனம் எழுந்து வருகிறது
மேலும் பேருந்து நிலையத்தின்கட்டுமான பணிகளை விரைவாக முடித்து பேருந்து கள் சிரமம் இன்றி வந்து செல்லும் வகை யில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையானது எழுந்துள்ளது
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக