தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை குழு அமைச்சர் நேரில் சந்திப்பு. வணிகர்களுக்கு உள்ள பிரச்சினைகளை குறித்து முக்கிய ஆலோசனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஜூன், 2026

தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை குழு அமைச்சர் நேரில் சந்திப்பு. வணிகர்களுக்கு உள்ள பிரச்சினைகளை குறித்து முக்கிய ஆலோசனை.

சென்னை, 17.06.26 புதன் கிழமை தமிழக சட்டமன்ற வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை குழு அமைச்சர் செங்கோட்டையனிடம், தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வணிகர்களுக்கு உள்ள பிரச்சினைகளை சுட்டி காண்பித்து ஆலோசனை.

ஆன்லைன் வர்த்தகம், ஜிஎஸ்டி பிரச்சினைகள், ஆன்லைனில் மருந்து வணிகத்தினால் உள்ள பாதிப்புகள்,  திருச்செந்தூர் முருகன் கோயில் பாராம்பரிய வணிகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை.

மேலும் வணிகர்களின் அனுமதியின்றி வங்கி கணக்கை முடக்குவதை நிறுத்திட போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக வழங்கினர்.

அனைத்து கோரிக்கைகளையும் கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர், அத்தனை பிரச்சினைகளையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார், இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு வணிகர் சங்கத்தின், மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ், மாநில இணைச் செயலாளர் ஆலங்குளம் சொக்கலிங்கம், சென்னை மண்டல தலைவர் சந்திரசேகர், தூத்துக்குடி மண்டலத்தலைவர் வேலாயுத பெருமாள், நெல்லை மத்திய மாவட்ட தலைவர் எட்வர்ட் ராஜா, நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் நீலகிருஷ்ணன் மற்றும் வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜா சிங் வழக்கறிஞர்கள் ராஜேஷ், புலித்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad