தூத்துக்குடி மாவட்டம், தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் NEET (UG) 2026 தேர்வினை மொத்தம் 2015 தேர்வர்கள் எழுதவுள்ளனர் – மாவட்ட ஆட்சியர் தகவல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் NEET (UG) 2026 தேர்வுகள் 21.06.2026 அன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
இத்தேர்வு தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் எட்டையபுரம் ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை மொத்தம் 2015 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.
மேற்படி தேர்விற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மின்சார வாரியம், சுகாதாரத் துறை, பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறை ஆகிய தொடர்பு துறைகளுக்கான ஆலோசனை கூட்டம் 18.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் NTA-ஆல் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு தேர்வு நாளான 21.06.2026 அன்று முற்பகல் 11.00 மணிக்கு முன்னரே தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும்.
உரிய நேரமான பிற்பகல் 01.30 மணிக்கு பின்னர் வருகை தரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், Smart Watch, தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக