பணி முடித்து வீட்டிற்குச் சென்ற தலை மை பெண் காவலர் கத்தியால் குத்திக் கொலை. கணவரை போலீசார் கைது செய்து விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

பணி முடித்து வீட்டிற்குச் சென்ற தலை மை பெண் காவலர் கத்தியால் குத்திக் கொலை. கணவரை போலீசார் கைது செய்து விசாரணை !

பணி முடித்து வீட்டிற்குச் சென்ற தலை மை பெண் காவலர் கத்தியால் குத்திக் கொலை. கணவரை போலீசார் கைது செய்து விசாரணை !
குடியாத்தம் ,ஆக.13- 
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (வயது 40). இவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வருகிறார்
இவரது கணவர் அர்வின் (வயது 45), ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இருவருக் கும் திருமணமாகி 13 ஆண்டுகள்ஆகிறது
இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படு கிறது.இதனிடையே, இன்று இரவு பணி முடித்து தாமரைச் செல்வி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரை அவரது கணவர் அர்வின் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது.வாக்குவாதம் முற்றிய நிலையில், அர்வின் மறைத்து வைத்திருந்த கத்தி யால் தாமரைச்செல்வியின் கை, கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சர மாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடன டியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலை  மை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி பரிதாபமாக உயிரிழந் தார்.உடல் கூறு ஆய்விற்காக வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர் இதையடுத்து, அவரது கணவர் அர்வினை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பாக தீவிர விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.பணி முடித்து வீட்டிற்கு சென்ற தலைமைபெண் காவலரை அவரது கணவரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குடியாத் தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad