ஸ்ரீவைகுண்டம் ஆகஸ்ட் 14. நவதிருப்பதிகளில் முதலாவதான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில் அருகே உள்ள ஆண்டாள் ரெங்கமன்னார் சன்னதியில் ஆடிப் பூரம் அவதார தினம் நடந்தது.
காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். . பின்னர் ஆண்டாளுக்கு மஞ்சள். வளையல்கள் குங்குமம் சாத்தப்பட்டது. 11 மணிக்கு தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ராமானுஜம். நம்பி . சீனிவாசன். சீனிவாச தாத்தம். கண்ணன் ஆகியோர் சேவித்தனர்.
சாத்து முறை கோஷ்டி நடந்தது தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு நாச்சியார் திருமொழி சேவிக்கப்பட்டு சாத்து முறை கோஷ்டி நடந்தது.
தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பெண்களுக்கு வளையல் குங்குமம் மஞ்சள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சனை நாராயணன் செய்து இருந்தார்
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக