குதிரைமொழி கிராமத்தில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆடி பவுர்ணமி பூஜை. திருவிளக்கு பூஜை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜூலை, 2026

குதிரைமொழி கிராமத்தில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆடி பவுர்ணமி பூஜை. திருவிளக்கு பூஜை.

குதிரைமொழி கிராமத்தில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆடி பவுர்ணமி பூஜை. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் வழிபாடு.

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குதிரை மொழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் ஆண்டு தோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு விழா பிரசித்தி பெற்றது. 

இவை தவிர ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடு மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆடி பவுர்ணமியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 2:30 மணிக்கு யாகசாலை பூஜை ,தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு திருவாசகம் வாசிக்கப்பட்டது. 

மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய துறையினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad