சமூக நீதித்துறை அமைச்சர் தலைமை யில் மாநில அளவிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டம் !
புதியதாக பதிவு செய்யப்பட்ட எஸ்சி வழக்கறிஞர்களுக்கு அலுவலகம் அமைக்க பணம் ஒதுக்கீடு செய்ய லாவண்யா கூட்டத்தில் கோரிக்கை
சென்னை , ஜூலை 3 -
சென்னை எழிலகத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கத்தில் , மாநில அளவிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செய லாளர் டாக்டர் என். சுப்பையன், ஆதிதிரா விடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் க.சு. கந்தசாமி, கூட்டம் ஏற்பாடு செய்தார் ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ், பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் உமா மகேஸ்வரி வரவேற் றார் ,துறையின் மூலம் நடைமுறைப் படுத்தும் திட்டங்களில் உள்ள சிக்கல்கள், தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.கருத்து களும் கவனத்தோடு பரிசீலிக்கப்படும் என்றும், இத்தகைய கூட்டம் தொடர்ச்சி யாக நடத்தப்படும் என்றும் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு தலைமை தாங்கி உறுதி அளித்தார் .இதில் பாரதி தமிழ் சங்க செயலாளர் பேராசிரியை லாவண்யா பங்கேற்று பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார் அதில் தமிழ்நாடு முழுவதும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு அளவீடு செய்து கொடுக்கப்படவில்லை , இதற்கு வருவாய்த் துறையில் கல் நடுவதற்கு தனியாக பணம் ஒதுக்கீடு செய்யப் படுவது கிடையாது , இதனை அரசு கவனத்தில் செலுத்த வேண்டும் புதிய இளம் வழக்கறிஞர்களுக்கு அலுவலகம் அமைக்க வழங்கப்பட்டுள்ள தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது இதனை உடனடியாக வழங்க வேண்டும் ,பஞ்சமி நிலங்களை மீட்க மாவட்ட மாநில வாரியாக தனிக்குழு நிறுவ வேண்டும்
உள்ளிட்டவை வலியுறுத்தி லாவண்யா தினேஷ் பேசி அமைச்சர் வன்னியரசு யிடம் கோரிக்கை மனு அளித்தார்
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக