குடியாத்தத்தில் பைக் திருடிய இளைஞர் கைது - 2 பைக்குகள் பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜூலை, 2026

குடியாத்தத்தில் பைக் திருடிய இளைஞர் கைது - 2 பைக்குகள் பறிமுதல் !

குடியாத்தத்தில் பைக் திருடிய இளைஞர் கைது - 2 பைக்குகள் பறிமுதல் !
குடியாத்தம், ஜூலை 3 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை நகர போலீசார் கைது செய் தனர். அவரிடமிருந்து 2 பைக்குகள் பறி முதல் செய்யப்பட்டன குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற் கிடமாக நின்றிருந்த இளைஞரை குடியாத்தம் டவுன் போலீஸ் சார் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். தீவிர விசாரணையில் அவர் குடியாத்தம் பகுதியில் 2 பைக்குகளை திருடியது தெரியவந்தது.பின்னர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முகமத் நதீம், வயது 24 என்பதும், இவர் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் என்பதும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்துகுடியாத்தம்
நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 2 பைக்கு களையும் பறிமுதல் செய்தனர்.மேலும் இவர் வேறு ஏதேனும் திருட்டு சம்பவங் களில் ஈடுபட்டுள்ளாரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad