தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் (SMC) மூலம் நிரப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜூலை, 2026

தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் (SMC) மூலம் நிரப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், மானாடுதண்டுபத்து அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) பணியிடம் -1 மற்றும், இராணிமகாராஜபுரம், திருமங்கலகுறிச்சி, லட்சுமிநாராயணபுரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் - 3 பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் (SMC) மூலம் நிரப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளதன் பேரில் 

கீழ்க்கண்ட பணிநியமன நெறிமுறைகள் மற்றும் தகுதிகளைப் பின்பற்றி நிரப்பப்படுகிறது.

கால வரம்பு – விண்ணப்பதாரர்கள் 02.07.2026 முதல் 10.07.2026 வரை பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ / அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடமோ சமர்ப்பிக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - கல்வித் தகுதி / வயது: வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET PAPER II) தேர்ச்சி பெற்றவர்கள் (சமூக அறிவியல் BA, B.Ed)
இடைநிலை ஆசிரியர் கல்வித் தகுதி / வயது – வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET Paper-1). 

இடைநிலை ஆசிரியர்களுக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படவேண்டும்.
முன்னுரிமை – 
(i). இடைநிலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில்          
     ஆதிதிராவிடர்/பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை கடைபிடிக்க வேண்டும்.    

(ii). பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

மேலும் தகவலுக்கு 7338801280, 7338801343, 7305672537 மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad