இருசக்கர வாகன விபத்தில் மூளை சாவு அடைந்து உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் !
திருவண்ணாமலை மாவட்டம் கூலி தொழிலாளி வெல்டராகப் பணிபுரியும் துளசி லிங்கம் என்ற (18 வயது) இளைஞர், ஜூலை 1 ஆம் தேதி இரவு 9:45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஜேசிபி வாகனம் மீது மோதி சாலை விபத்தில் சிக்கினார். ஜூலை 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக் கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவரது கல்லீரல் வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கும், ஒரு சிறுநீரகம் அப்பல்லோ மருத்துவமனைக்கும், மற்றொரு சிறு நீரகம் சென்னை ரேலா மருத்துவ மனை க்கும் வழங்கப்பட்டுள்ளது. அவரது கண் கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவரது தந்தை மகேந்திரன் ஒரு கூலித் தொழி லாளி. அவரது தாய் முனியம்மாவும் தற்காலிகக் கூலி வேலை செய்கிறார். அவரது அண்ணன் லட்சுமணன் மற்றும் தம்பி நரேஷ் குமார் ஆகியோரும் வெல்டிங் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக