மின்வாரிய காலிப் பணியிடங்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். - தொழிற்சங்கம் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

மின்வாரிய காலிப் பணியிடங்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். - தொழிற்சங்கம் கோரிக்கை.


மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி   முடித்தவர்கள் ஒருங்கிணைந்து TAMILNADU ELECTRICITY BOARD APPRENTICE TRADE UNION என்று தொழிற்சங்கமாக பதிவு செய்து செயல்பட்டு வருகின்றனர்  மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி துறையின் மூலம் அப்ரண்டீஸ்  பயிற்சி முடித்தவர்களுக்கு 70% இட ஒதுக்கீடு அரசு வழங்கியுள்ளது அதன் அடிப்படையில் மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த ITI, டிப்ளமோ BE அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு TNEBATU  தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது.


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் சுமார் 5000 நபர்கள் (அ) 5000 குடும்பங்கள் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். மின்வாரியத்தில் 60,000 காலிப் பணியிடங்கள் உள்ளது என அதிகாரப்பூர்வமாக மின்வாரியம் அறிவித்துள்ளது கடந்த 2014 முதல் 2024 வரை மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் மற்றும் முன்னுரிமை இதுவரை வழங்கவில்லை,


பலமுறை மின்வாரியத்திடமும்  மின்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தும் APPRENTICE TRADE UNION (TNEBATU) கோரிக்கைகளை முறையிட்டுள்ளனர் ஆனால் இதுவரை அரசு தரப்பிலோ மின்வாரிய தரப்பிலோ எந்த பதிலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று மின்வாரிய   அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் மனவேதனை அடைகின்றனர்.


இது குறித்து முதல்வரின் தனிபிரிவு உதவி எண் 1100 விற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கோரிக்கை பதிவு செய்யப்பட்டதா கூறப்படுகின்றது ஆனால் இந்த செய்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வை க்கு கொண்டு  செல்லாமல் தமிழக அரசு மீண்டும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் தொடர்பு கொண்டு தனியார் துறையில் வேலைக்கு  முயற்சி செய்யுங்கள் பதில் அளித்துள்ளனர் வேலை வாய்ப்பு அதிகாரிகள்.


இந்த ஆட்சியில் வேலை வாய்ப்பிற்காக என்னதான் முயற்சிகள் செய்தாலும் TNEB அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களு மின்சார வாரியமும் தமிழ்நாடு அரசுசம் கண்டுகொள்ளாமல் இருப்பது அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களிடையே  மிகுந்த ஏமாற்றம் அடையச்செய்கின்றது.


மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்  ITI டிப்ளமோ BE அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கும்  அரசுக்கும் TNEBATU அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் கோரிக்கை வைக்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad