“தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கும், சமூகநீதி மீதான நம்பிக்கைக்கும் அடையாளமான ஆட்சி திமுக ஆட்சிதான்,” என்று திமுக மாநில ஊடக பிரிவு இணைச் செயலாளர் சல்மா பேச்சு.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், "நாடு போற்றும் நான்காண்டு – தொடரட்டும் பல்லாண்டு" என்ற தலைப்பில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டம் மிகுந்த உற்சாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையிலான விழாவில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் மற்றும் மாநில ஊடக பிரிவு இணைச் செயலாளர் சல்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
தமது உரையில் சல்மா கூறுகையில்,
"பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, மாதந்தோறும் ரூ.1000 ‘மகளிர் உரிமைத் தொகை’, மற்றும் பல பெண் மேம்பாட்டு திட்டங்களை திமுக அரசாங்கம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பெண்கள் முன்னேற உதவும் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னோடியாக செயல்பட்டு வருகிறார்,” என்றார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன், உள்ளிட்ட திமுக நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக