இரு சக்கர வாகன விபத்து ! சால்வை இரு சக்கரத்தில் சிக்கி விழுந்ததில் தலையில் காயம் ! உடல் உறுப்புகள் தானம் !
வேலூர் ,ஜன 20 -
வேலூர் மாவட்டம் செண்பாக்கம், 85, நேதாஜி தெருவில் வசிக்கும் சிந்து (வயது 32) இரு சக்கர வாகன விபத்தில் சிக்கினார். அப்போது அவரது சால்வை சக்கரத்தில் சிக்கி இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து ஜனவரி 18 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடந்தது. மாலை சுமார் 6:30 மணியளவில் சிகிச்சைக்காக அவர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 19 ஆம் தேதி இரவு 10:15 மணிக்கு மூளை சாவு அறிவிக்கப்பட்டது.
அவரது கணவர் ஜெகதீஷ் ஸ்வரம் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதயம் மற்றும் நுரையீரல் எடுக்கப்படவில்லை. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சிஎம்சி வேலூர் எடுத்தது. ஒரு சிறுநீரகத்தை சென்னை அப்பல்லோ மருத்துவமனை எடுத்தது. கண்கள் சிஎம்சி வேலூர் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் அறிவுறுத்தலின்படி அனைவரும் கட்டாயமாக தலை கவசம் அணிய வேண்டும் அவ்வாறு அணிந்திருந்தால் இந்த உயிர் சேதம் நடந்திருக்காது சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக