திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளருமான A.நாகராஜ் ஏற்பாட்டில் 28 வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது இதில் அனைத்து மதத்தை சார்ந்த 5000 பெண்கள் கலந்துகொண்டு சூரிய பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர் இந்த நிகழ்வை மதிமுகவின் அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியின் முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய தமிழ் பண்பாட்டு உடை அணிந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் தொடர்ந்து மதிமுக கொடியினை மாநில அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் ஏற்றி வைத்து புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார் இதனை தொடர்ந்து பொங்கல் வைத்த பெண்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பெண்களுக்கு ரொக்க பரிசு வீட்டு உபயோக பொருட்களும் வழங்கப்பட்டது இந்த சமத்துவ பொங்கல் விழாவில் மும்மதத்தை சேர்ந்த பெண்கள் ஜாதி மத பேதமின்றி கலந்து கொண்டு பொங்கல் வைத்து
பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் இந்த சமத்துவ பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் A.நாகராஜ் அவர்கள் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்
மும்மதத்தை சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
மாவட்ட செய்தியாளர் காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக