நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட 8 காவல் ஆய்வாளர்களை (Taluk) உடனடியாக பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி (DIG) இன்று உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்ற விவரங்கள்:
E. *சாம்சன்: தென்காசி மாவட்ட குற்றப் பிரிவு ஆவணக் காப்பகத்திலிருந்து (DCRB), கன்னியாகுமரி மாவட்ட NSD (நக்சல் தடுப்பு பிரிவிற்கு) மாற்றப்பட்டுள்ளார்.
S. சத்திய பாமா: கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து (AWPS), தென்காசி மாவட்ட DCRB பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
U. ஜென்சி: நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிலிருந்து (PEW), கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றப்பட்டுள்ளார்.
K. சுதாகர்: கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவிலிருந்து, கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
S. யேசுராஜசேகரன்: தூத்துக்குடி வடக்கு குற்றப்பிரிவிலிருந்து, தூத்துக்குடி தெற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
M. மணிகண்டன்: குளத்தூர் காவல் நிலையத்திலிருந்து, எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
S. செந்தில்வேல் குமார்: எட்டயபுரம் காவல் நிலையத்திலிருந்து, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
M. ரென்னிஸ்: ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திலிருந்து, குளத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
என திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக