கோவை மாவட்டம். கிணத்துக்கிடவு தாலுகாவில் அமைந்துள்ள, வடசித்தூர் கிராமத்தில் 2026 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவானது ,அறிவொளிநகர் பகுதியில் கானும்பொங்கல் அன்று சிறப்பான போட்டிகளோடும்,நடனங்களோடும் சிறப்பாக நடைபெற்றது .
இதற்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து கொடுத்தார்கள் .
மேலும் இந்த விழாவானது பெண்களின் முயற்சியால் முன்னேற்பாடுகள் செய்து சிறப்பாக நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் அசத்தலான நடனங்களால் விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பாக சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
இதில் தூய்மை பணியாளர் சம்பூர்ணா அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அது என்னவென்றால் நாம் வீட்டில் இருக்கும் குப்பை கழிவுகளை ரோட்டோரத்தில் போடுவதால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும்,
அந்த குப்பை கழிவுகளை வீட்டிலேயே வைத்து கொள்ளுமாறும் அவர்கள் வீடு தேடியே வந்து எடுத்துக்கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை அனைவருக்கும் ஒரு வேண்டுகோளாகவும் காலில் விழுந்து கேட்கிறேன் என்றும் அவர் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டார் .
அதற்கு அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறுகேட்டுக்கொண்டது விழாவில்அனைவருக்கும் மனநெகிழ்ச்சியாக இருந்தது.
இது தமிழக மக்கள் அனைவரும் கடைபிடிக்கவும் கேட்டு கொள்ளப்பட்டது.
இறுதியாக விழாவில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
இதற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் முழு ஆதரவோடு சிறப்பாக நடைபெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக
சூலூர் தாலுகா செய்தியாளர்
R.சுப்ரமணியம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக