ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்த இரு பெண் குழந்தைகள் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஏரல் சேர்மன் கோயில் தாமிரபரணி ஆற்றில் இன்று (20.02.2026) மாலை 4.00 மணி அளவில் தேனி மாவட்டம், தேனியைச் சேர்ந்த சங்கர குமார் என்பவர் குடும்பத்துடன் குளித்த பொழுது சங்கரகுமாரின் மகள்கள் அபிநயா (வயது 16 ) மீனாட்சி (வயது 12) ஆகிய இரு பெண் குழந்தைகள் ஆற்றில் மூழ்கியதாகவும்,
மேற்படி இரு நபர்களின் உடலை ஏரல் தீயணைப்பு துறையினர் கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏரல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர் இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேற்படி இறந்த குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏரல் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
அடிக்கடி இந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்படுகிறது தயவு செய்து, அரசு சம்பவ இடத்தில், ஒரு எச்சரிக்கை பலகை மற்றும் கயிறு கட்டிவிட வேண்டுமெனவும்,
அடிக்கடி உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக