தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரணத்தொகை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் விவசாய நல அமைப்பு கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரணத்தொகை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் விவசாய நல அமைப்பு கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரணத்தொகை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் 
விவசாய நல அமைப்பு கோரிக்கை 

பிப்.20- தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, குலையன்கரிசல் விவசாயிகள் நல அமைப்பை சார்ந்த கிருஷ்ணகோபால் தூத்துக்குடி சப்- கலெக்டர் பிரபு அவர்களுக்கு கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது 

2024 டிசம்பர் மாதம் இரண்டு நாட்கள் இடைவிடாத மழையின் காரணமாக
விவசாய விளை நில பகுதியில் உபரி நீர் தேங்கி நெல், வாழை பயிர்கள் சேதம் அடைந்தது. 

தூத்துக்குடி சட்டமன்றத் உறுப்பினரும், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் P.கிதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் சேதம் அடைந்த பயிர்களை நேரடியாக பார்வையிட்டார். 

மாவட்ட நிர்வாகம் முலம் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க உத்தரவுவிட்டனர். மாவட்ட நிர்வாகம் நேரடியாக நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடத்தினர்.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு தமிழக அரசின் நிவாரணம் தொகை வந்து பல நாட்கள் ஆகியுள்ளது.

மேலும் விவசாயிகளின் வங்கி கணக்கு எண் தவறுதலாக உள்ளது என்று மீண்டும் விவசாயிகளின் வங்கி கணக்கு நகல் கிராம நிர்வாக அலுவலக அதிகாரிகளிடம் வழங்கி உள்ளோம். 

ஆனால் நிவாரணம் வங்கி கணக்கில் இதுவரை வரவு வைக்கப்படவில்லை எனவே நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad