குடியாத்தம் அருகே விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 மே, 2026

குடியாத்தம் அருகே விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை போலீசார் விசாரணை !

குடியாத்தம் அருகே விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை போலீசார் விசாரணை !
குடியாத்தம் , மே 21
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கூடநகரம் கிராமம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த  கவியரசு அவர்களின் மகன் ஆகாஷ் ஆபிரகாம், வயது சுமார் 18, என்பவர் 19.05.2026 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் விஷ மருந்து அருந்தியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக சி.எம்.சி மருத்துவமனை, வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி 20.05.2026 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் உயிரிழந்தார். மேற்படி நபர் தனியார் கல்லூரியில் பயின்று வந்தவராகவும், அவருடைய தந்தை கூலி வேலை செய்து வருபவராகவும் விசாரணையில் தெரிய வருகிறது.இது சம்பந்தமாக குடியாத்தம் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad