மேச்சேரி, ஜூலை 15:
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முத்தமிழ் மன்றத்தில், பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அனிதா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் செல்வக்குமார் தலைமையுரையாற்றி, காமராசரின் துணிச்சல், கல்வி வளர்ச்சிக்காக அவர் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் அவரது தொலைநோக்கு சிந்தனைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நாகராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கவிதா வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பட்டிமன்றப் பேச்சாளரும், அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளருமான தருமபுரி ஜே.எஸ். அதியமான், "கல்வியும் புரட்சியும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெண்கல்வியின் அவசியம், காமராசரின் கல்விப் புரட்சி, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை சுவையான நிகழ்வுகள் மற்றும் கதைகள் மூலம் விளக்கி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தாளாளர் இராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், இணைச் செயலாளர் ஹரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், துறைத்தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான கவிதா நன்றியுரை வழங்கினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக