திருச்செந்தூரில் காமராஜர் சிலைக்கு
நற்பணி இயக்கத்தினர் மாலை அணிவிப்பு
தலைவர் பிரகாஷ், துணை தலைவர் மோகன் உள்பட பலர் பங்கேற்பு
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் "கல்வி வளர்ச்சி நாள்" ஆக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கண்ணைத் திறந்த அவரது வரலாற்றுச் சாதனைகளைப் போற்றும் வகையில் அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மாநிலம் முழுவதும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.
அனைத்துப் பள்ளிகளிலும் காமராஜரின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
காமராஜரின் 124வது பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் மேலநாடார் தெருவில் உள்ள அவரது சிலைக்கு காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நற்பணி இயக்க தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். துணை தலைவர் மோகன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், செயலாளர் வடிவேல் செல்வம், இணை செயலாளர் கண்ணன், பட்டுராஜன்,
பாலசுப்பிரமணியன், செல்வம், சட்ட ஆலோசகர் திலீப்குமார், சேகர், கவுன்சிலர் அர்ச்சனா பாலசுப்பிரமணியன், செந்தில்,வேல்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக