பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகள் பிரிவு புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு !
பேரணாம்பட்டு, ஜூலை 2
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம், கிராம ஊராட்சிகள் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்ற பின் அவர் கூறுகையில், பேரணாம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக் களுக்கு குடிநீர் தடையின்றி உடனுக்கு டன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும். அரசின் நலத்திட்டங்கள் அனைத் தும் மக்களை சென்றடைய விரைந்து செயல்படுவேன்" என உறுதியளித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பேரணாம்பட்டு ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற் றிய மீனா, தற்போது வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்று மீண்டும் இங்கு பணியில் சேர்ந்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாவுக்கு அரசியல் பிரமுகர் கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக