ஏரல் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ் ராஜா (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
சோதனையின்போது 1 கிலோ 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. எதிரி மீது NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 100 அல்லது 9514144100 என்ற அவசர உதவி எண்ணிலோ அல்லது Drug Free Tamil Nadu App மூலமாகவோ தெரிவிக்கலாம். என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக