மாவட்ட கழக செயலாளர் பிரைட்டர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு.
தஞ்சையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக பெண்கள் குறித்தும் ,முதல்வர் விஜய் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பிரைட்டர் தலைமை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் விஜய் ஆனந்த், பொருளாளர் சீமான், திருச்செந்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ,மேற்கு ஒன்றிய செயலாளர் நீதிபாலன் கார்த்திக், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரசாத், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெப பிரபு, மத்திய ஒன்றிய செயலாளர் ஆசிர் ராஜ்குமார்,
திருச்செந்தூர் நகர செயலாளர் முருகானந்தம், காயல்பட்டணம் நகர செயலாளர் ஹனிபா, ஆறுமுகநேரி பேரூர் செயலாளர் நிவாஸ் கண்ணன், ஆத்தூர் பேரூர் செயலாளர் செல்வ முருகன், நாசரேத் பேரூர் செயலாளர் சுதர்சன், உடன்குடி பேரூர் செயலாளர் சசிகுமார், தென்திருப்போரை செயலாளர் சுரேஷ், காணம் பேரூர் செயலாளர் தங்கராஜ், விஜய் மக்கள் இயக்கம் குட்டி,
இளைஞரணி பிரேம்குமார், தொழில்நுட்ப பிரிவு பத்லால், போக்குவரத்து பிரிவு வேல்பாண்டி, தன்னார்வலர் அணி சர்க்கார் காயல் அஸ்ரப் அலி, பில்லு முத்து இளம் பெண்கள் அணி வனரவீனா, நித்யா, முத்துக்கனி, மகளிர் அணி ஜமினா வழக்கறிஞர் அணி ரவீந்திரன் ஹேமா வர்த்தகர் அணி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக