பட்டா இடத்தில் பாதை ! மறித்து சுற்றுச் சுவர் பொது மக்கள் சாலை மறியல் காட்பாடி அருகே பரபரப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

பட்டா இடத்தில் பாதை ! மறித்து சுற்றுச் சுவர் பொது மக்கள் சாலை மறியல் காட்பாடி அருகே பரபரப்பு !

பட்டா இடத்தில் பாதை ! மறித்து சுற்றுச் சுவர் பொது மக்கள் சாலை மறியல் காட்பாடி அருகே பரபரப்பு !
காட்பாடி , செப்டம்பர் 13 -
           வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேட்டுக்குளம் பகுதியில் பட்டா இடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததால் இடத்தின் உரிமையாளர்  சுற்றுச்சுவர் எழுப்ப ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வழி அடைத்ததால்  பொது மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேட்டுக்குளம் பகவதி அம்மன் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரது நிலத்தின் பின் புறம் 'பகவதி அம்மன் நகர்' என்ற பெய ரில் புதிய வீட்டு மனைகள் உருவாக்கப் பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அசோக்குமா ரின் நிலம் வழியாக சென்றுவந்துள்ளனர்
         இந்நிலையில், அசோக்குமார் தனது சொந்த பயன்பாட்டிற்காக அந்நிலத்தைச் சுற்றி மதில் சுவர் அமைக்கும் நோக்கில் ஜேசிபி இயந்திரம் மூலம் திடீரென பள் ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பிரதான வழியை அடைக்கக் கூடாது எனக்கூறி பணியைத் தடுத்து நிறுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் தரப்பில் கூறுகையில் "இப்பகுதி மக்கள் செல்வதற்கு மாற்று வழித்தடம் உள்ளது. இருப்பினும் எனது பட்டா நிலத்தை பொது மக்கள் பாதையா கப் பயன்படுத்துவதால் பல்வேறு நடை முறைத் தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே எனது இடத்தில் வீடு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்" என்று தெரிவிக் கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பகவதி அம்மன் நகர் பகுதி பொதுமக்கள் பொதுப் பயன்பாட்டுப் பாதையை மறிக் கக் கூடாது என வலியுறுத்தி சித்தூர் - காட்பாடி சாலையில்  திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது தகவலறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad