சுமார் 100 லோடு அளவிற்கு மக்காத குப்பைகளும், ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க !
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்போலோ ஹாஸ்பிடல் எதிரில் உள்ள பாபா ஆல்வா பிளாக் கம்பெனிக்கு பின்புறம் உள்ள பாலாற்றுப் பகுதிக்குச் சொந்தமான அரசு நிலம் அடையாளம் தெரியாத நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும், சுமார் மூன்று கிரவுண்ட் பரப்பளவிலான அந்த நீர்நிலை இடத்தில், இதுவரைசுமார் 100 லோடு அளவிற்கு மக்காத குப்பைக ளும் , ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி யின் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாகச் சீரழிந்து வருகிறது.எனவே, தாங்கள் உடனடியாக இப்பகுதியைப் பார்வையிட்டு, நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, குப்பைகளைக் கொட்டி யவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக் கை எடுத்து, அக்குப்பைகளை அப்புறப் படுத்த ஆவன செய்யுமாறு சமூக ஆர்வல ரும் மற்றும் மக்கள் நலனுக்காக போரா டும் போராளியுமான பாரக் பாஷா அவர் கள் நிருபர்களிடம் தன்னுடைய ஆதங்கத் தையும் மனதில் உள்ள குமுறலை வெளிப்படுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக