குடியாத்தம் அருகே சாலை விபத்தில் வருவாய் துறை ஊழியர் உயிரிழப்பு திருமணம். ஆகி. 6 மாதத்தில் சோகம் !
குடியாத்தம் ,செப்டம்பர் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்னா ராயணபள்ளி கிராமத்தில் இன்று (06.09. 2026) மாலை 03.45 மணியளவில் குடியாத் தம் R.S ரோடு, ராகவேந்திரா நகர் என்ற முகவரியில் வசித்து வரும் கண்ணன் த/பெ கதிரவன் (வயது-29) வேலூர் மாவட்ட வருவாய்த்துறை அலகில், கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் TN23 CX 9941 என்ற இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி வரும் போது, காட்பாடி நோக்கி செல்லும் கண் டைனர் வண்டி எண் KA51 AL 2451 என்ற வண்டியில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என தெரிகிறது. அவரது உடல்குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. இது சம்பந்தமாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக