தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மற்றும் முதல்வர்களுக்கு பாராட்டு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மற்றும் முதல்வர்களுக்கு பாராட்டு விழா !

தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மற்றும் முதல்வர்களுக்கு பாராட்டு விழா !
வாணியம்பாடி, செப்.6- 
திருப்பத்தூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில், 100 சதவீத தேர்ச்சிபெற்ற தனியார் பள்ளிகளுக்கும், அப்பள்ளி களின் முதல்வர்களுக்கும் கேடயம் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
ஏலகிரி பகுதியில் உள்ள ஏஜிஎஸ்சொகுசு விடுதியில் நடைபெற்ற விழாவிற்கு, திருப்பத்தூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாலாஜி அனைவரையும் வரவேற்றார். முதல்வர் உஷா விழாவை தொகுத்து வழங்கினார்.இதில் சிறப்பு அழைப்பாள ராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி கலந்து கொண்டு, 100 சதவீத தேர்ச்சி பெற்ற 60 தனியார் பள்ளி களுக்கும், அப்பள்ளிகளின் முதல்வர்களு க்கும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
விழாவில் கல்வியாளர்கள் சண்முகம், மோகன்குமார், தெய்வசிகாமணி, பஷீர் அஹ்மத், தனஜெயன், ரமேஷ், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை ஏற்பாடு செய்து நடத்தினர்.இந்த பாராட்டு விழாவில் பள்ளி நிர்வாகிகள், முதல்வர் கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முடி வில் சங்கத்தின் செயலாளர் சரவண குமார் நன்றி கூறினார்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad