கல்குவாரியை மூடக்கோரி சுடுகாட்டில் பந்தல் அமைத்து கை குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம் நூதன எதிர்ப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

கல்குவாரியை மூடக்கோரி சுடுகாட்டில் பந்தல் அமைத்து கை குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம் நூதன எதிர்ப்பு!

 கல்குவாரியை மூடக்கோரி சுடுகாட்டில் பந்தல் அமைத்து கை குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம் நூதன எதிர்ப்பு!
வாணியம்பாடி, செப்.6-
      திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தென்மலை பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட தொடங்கியது. கல் குவாரியை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், வெடி வைத்து பாறை களை தகர்ப்பதாலும், கற்களை அரைக் கும் போது வெளியேறும் தூசி துகள் களாலும் பொதுமக்கள், விவசாய நிலங் கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவ தாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மடபள்ளம், தண்ணிகுண்டுகொல்லி, கல்லூர், சக்கரப்பனூர் உள்ளிட்ட பகுதி களில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கல்குவாரியை மூடக்கோரி துறை சார்ந்த அதிகாரிகளி டம் பலமுறை மனு அளித்து போராட்டங் களில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரண மாக சுமார் ஓராண்டு காலம் கல்குவாரி செயல்படாமல் இருந்ததாகவும், ஆனால் கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் கல் குவாரி செயல்பட்டு வருவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்  கல் குவாரி யை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளி டம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, பொது மக்கள் கல்குவாரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக அதே பகுதியில் உள்ள சுடுகாட்டின் நடுவே பந்தல் அமை த்து, அங்கேயே மதிய உணவை சமைத்து சாப்பிட்டு, கை குழந்தைகளுடன் அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சி யர் வரதராஜன் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோர் போராட்ட த்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிக ளின் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன் படாத பொதுமக்கள், கல்குவாரியை உடன டியாக மூட வேண்டும்; இல்லை யெனில் சுடுகாட்டிலேயே இரவு உறங்கிப் போராட்டத்தை தொடர் வோம் என திட்ட வட்டமாக தெரிவித்தனர். இதனால் கல் குவாரியை மூடக்கோரி சுடுகாட்டில் பந்தல் அமைத்து, கை குழந்தைகளுடன் உணவு சமைத்து சாப்பிட்டு பொதுமக்கள் மேற்கொண்டு வரும் நூதன போராட்டத் தால் தென்மலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad