சென்னை, ஆகஸ்ட் 7:
சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயில் சார்பில், இந்த ஆண்டுக்கான ஆடிப் அமாவாசை பலி தர்ப்பண நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 12 (புதன்கிழமை) அதிகாலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி, சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில், சாந்தோம் தேவாலயத்தின் பின்புறம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் அதிகாலை 4.30 மணி முதல் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயில் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கர்மி ஸ்ரீ சிவசங்கரன் (உண்ணி) அவர்களின் நேரடி மேற்பார்வையில் பலி தர்ப்பண சடங்குகள் நடைபெற உள்ளன.
டோக்கன் பெறுவது எப்படி?
பலி தர்ப்பணம் செய்ய விரும்பும் பக்தர்கள், ஆகஸ்ட் 12 அதிகாலை 4.00 மணி முதல் நொச்சிக்குப்பம் கடற்கரையில் அமைக்கப்படும் பதிவு கவுன்டரில் தங்களது பெயர் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச காலை உணவு
பலி தர்ப்பண சடங்குகளை நிறைவு செய்த அனைத்து பக்தர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கப்படும். மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்ப பக்த சபை சார்பில் பக்தர்களுக்காக இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபெறுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு
கோயில் அலுவலகம்:
- 044-28171197
- 044-28172197
செல்போன்:
- 88079 18811
- 88079 18822
- 96770 03633
- 95000 21858
- 94442 90707
- 88079 18855
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக