வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கே வி குப்பம் அருகே ஏரியில் முரம்பு‌ மண் எடுத்து அதிக விலைக்கு விற்பனை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜூலை, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கே வி குப்பம் அருகே ஏரியில் முரம்பு‌ மண் எடுத்து அதிக விலைக்கு விற்பனை!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 
கே வி குப்பம் அருகே ஏரியில்  முரம்பு‌ மண் எடுத்து அதிக விலைக்குவிற்பனை! 
கே வி குப்பம் , ஜூலை 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கேவி குப்பம் அருகே ஏரியில் இரும்பு மண் எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்கண்டும் காணாமல் இருக்கும் வருவாய் துறையினர்: துணை போகும் பொதுப்பணித்துறை வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காவனூர் கிராமத்தில் உள்ள சுமார் 300 ஏக்கர் பரப் பளவு கொண்ட ஏரி.அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு நீர் ஆதா ரமாக இருந்து வருகிறது. இந்த நிலை யில் அந்த ஏரியில் விஜயன் மற்றும் சரவணன் இருவரும் பொதுப்பணித் துறை யிடம் விவசாய நிலத்திற்கு  முரம்பு மண் எடுத்துக் கொள்வதாக அனுமதி பெற்றுக்கொண்டு பொதுப்பணித்துறை உதவியுடன் மூன்று  கிராமத்தைத்தாண்டி ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் மண் எடுத்து ஒரு டிப்பர் லாரி ரூபாய் 4500 க்கு விற்பனை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக  வருவாய்த்துறை அதிகாரி களிடம் கேட்டதற்கு அலட்சியமாக எங்களுக்கு தெரியாது என்று பதில் அளித்தனர்.அரசு விதிமுறைப்படி ஏரியில் முரம்பு  மண் அள்ளி விவசாய நிலத்திற் கும் மற்றும் செட்டிப்பானை செய்வதற் கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.  ஆனால் அரசாங்கத்தையே ஏமாற்றி பல ஆயிரம் ரூபாய்க்கு ஏரியில் முரம்பு மண் எடுத்து  விற்பனை செய்து வருவது பொது மக்களிடையேவும் சமூக ஆர்வலர் கள் இடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்று ஏரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுத்து சட்டத்துக்கு புறம்பாக விற் பனை செய்த நபர்கள் மீதும், ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடியாத்தம்.தாலுக்கா‌.செய்தியாளர்
கே.வி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad