குலசேகரபட்டணம்: குலசேகரபட்டணம் சேகரத்திற்குட்பட்ட வடக்கூரின் தூய யோவான்ஸ்நானகன் ஆலயம், 237வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு, 12.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஆலய ஆராதனையைத் தொடர்ந்து நடைபெற்ற இம்முகாமில், Dr. Agarwal's Eye Hospital, தூத்துக்குடி மருத்துவக் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் சேகர குருவானவர் அருட்பணியாளர் பாஸ்கரன் வரவேற்றார். தொடர்ந்து குருவானவரம்மா ஜெபக்கனி ஆரம்ப ஜெபம் செய்தார். அசன கமிட்டித் தலைவர் ஜார்ஜ் முகாமைத் தொடங்கி வைத்தார். மருத்துவக் குழுவினரை சேகரப் பொருளாளர் அஜோ வரவேற்று பேசினார். பின்னர் ஊர் பெரியவர்கள் மருத்துவக் குழுவினருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
முகாமில் பங்கேற்ற 48 ஆண்கள், 61பெண்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை, கண் அழுத்தப் பரிசோதனை, பார்வைத் திறன் (கண் எண்) பரிசோதனை மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், முத்திரைக் கண் (Cataract) அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், கண் கண்ணாடி தேவைப்படுவோருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அத்துடன், அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மருத்துவக் காப்பீடு வசதி உள்ளவர்கள் லேசர் முறை கண்புரை (Cataract) அறுவை சிகிச்சையை கட்டணமின்றி மேற்கொள்ள தேவையான பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.
திருமண்டலப் பெருமன்ற உறுப்பினர் திரு. ஏசுவடியான மருத்துவ குழுவினருக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
சேகர குருவானவர் அருட்பணியாளர் பாஸ்கரன் நிறைவு ஜெபம் செய்து இனிதே முகாம் நிறேவு பெற்றது.
இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேகர குருவானவர் அருட்பணியாளர் பாஸ்கரன் தலைமையில், திருமண்டலப் பெருமன்ற உறுப்பினர் ஏசுவடியான், சேகரச் செயலாளர் ஜாண்தாமஸ், அசன கமிட்டிச் செயலாளர் ஆண்ட்ரூஸ், சேகரப் பொருளாளர் அஜோ மற்றும் வாலிப ஆண்கள், வாலிப பெண்கள் தன்னார்வலர்கள் இணைந்து சிறப்பாக மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக