ஜீன்:22, நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாணவர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் உதவி ஆய்வாளர் முரளி தலைமை வகித்து தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கான பதவி பிரமாண பேட்ஜை அணிவித்து, மாணவர்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் க{ழ்படிந்து நடக்க வேண்டும், போதை பொருட்கள் விற்பதை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது மீறி ஓட்டினால் பெற்றோர்கள் தான் முழு பொறுப்பு, காவல்துறை உங்கள் நண்பன், எந்தவிதமான புகார்களையும் தைரியமாக தெரிவிக்கலாம்,
உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்,
ஹெல்மட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஒட்ட கூடாது, முன் பின் தெரியாத மற்றும் வெளி நபர்கள் தின்பண்டம் கொடுத்தால் அதை வாங்க கூடாது என அறிவுரை கூறினார்.
பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பள்ளி தலைவர் எலிசபெத் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் கொடி அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு தலைவர்கள், கல்வி அமைச்சர், விளையாட்டுதுறை அமைச்சர், ஒழுங்குமுறை அமைச்சர், கலாச்சார அமைச்சர், சுற்றுசூழல் அமைச்சர் மற்றும் சிகப்பு, நீலம், பச்சை, மஞ்சள் அணித்தலைவர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
எவ்வாறு வருங்காலத்தில் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது, வீணாக புகையை ஏற்படுத்தி சுற்றுசூழலை மாசு செய்யக் கூடாது என்பதை நாடமாக மாணவர்கள் நடித்து, நடனம் ஆடிகாட்டினர்.
இதையடுத்து நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் முரளி மரக்கன்றுகளை நட்டுவித்தார். இந்த நிகழ்ச்சியினை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் சிறப்பாக நடத்தினர். இறுதியில் உதவி முதல்வர் முத்துபேச்சி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக