இரு சக்கர சாலை விபத்தில் கல்லூரி மாணவன் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனின்றி மூல சாவு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஜூன், 2026

இரு சக்கர சாலை விபத்தில் கல்லூரி மாணவன் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனின்றி மூல சாவு !

இரு சக்கர சாலை விபத்தில் கல்லூரி மாணவன் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனின்றி மூல சாவு !
வேலூர், ஜுன் 17
 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சேன் பாக்கம் சேர்ந்த  ரிதிஷ் சுரேஷ், (வயது 18) பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஜூன் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வாலாஜா அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார். அவர் 16 ஆம் தேதி அதி காலை 12:40 மணிக்கு சி.எம்.சி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு, அதே நாளில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.அவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். அவரது நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக் கும் , கல்லீரல் வேலூர் சி.எம்.சி மருத்துவ மனைக்கும் சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறு நீரகம் ரேலா மருத்துவ அறிவியல் நிறு வனத்திற்கும் , கண்கள் சி.எம்.சி மருத்து வமனைக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அவரது தந்தை சுரேஷ், ஒரு எரிவாயு முகமையில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். அவரது தாய் பவானி ஒரு இல்லத்தரசி. அவருக்கு ஷ்யாம் என்ற அண்ணன் உள்ளார், அவர் பி.சி.ஏ கணினி அறிவி யல் படித்து வருகிறார். சுஜிதா என்ற தங்கை 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்
என தெரிவித்தனர் ‌.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad