தாலுக்கா அலுவலகம் அருகில் கழிவு நீர் சாலையில் பாய்ந் தோடும் அவலம் - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஜூன், 2026

தாலுக்கா அலுவலகம் அருகில் கழிவு நீர் சாலையில் பாய்ந் தோடும் அவலம் - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதி !

 தாலுக்கா அலுவலகம் அருகில் கழிவுநீர் சாலையில் பாய்ந் தோடும் அவலம் - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதி !
பேரணாம்பட்டு , ஜூன் 17 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகம் மற்றும் வேளாண்மை அலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், துணி துவைக்கும் நீர், பாத்திரம் கழுவும் நீர் ஆகியவை கால்வாய் அடைப்பு காரண மாக வெளியேறி நெடுஞ்சாலைத்துறை சாலையை குறுக்கே கழிவு நீர் கடக்கிறது
இதனால் வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் தெறித்து சென்னை கே.ஜி.எப் சாலை வழியாக கடந்து செல்பவர்கள், மீதும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள் ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியால் சுற்றுப்புற மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர் வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் சாலை யை கடக்காமல் மாற்று வழி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad