திருட்டுப் பொருட்களை வாங்கி பதுக்கிய பழைய இரும்பு கடைக்காரரை பிடித்த பொருளின் உரிமையாளர்கள் !
திருப்பத்தூர் , ஜூலை 21 -
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியில் இயங்கி வரும் ஓம் சக்தி பழைய இரும்பு கடை இதை சக்திவேல் என்பவர் நடத்தி வருகிறார் இவர் கந்திலி மற்றும் காக்கங்கரை அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாய நிலங்கள் ஆகியவற்றில் இருந்து திருட்டுத்தனமாக திருடப்பட்ட மின் மோட்டார்கள்,மின் வயர்கள், பைப்புகள்,ஆகியபொருட்களை அதிக அளவில் குறைந்த விலைக்கு வாங்கி வருகிறார், இதனை அறிந்த சம்பந்தப்பட்ட நபர்கள் இன்று காலை அவரிடம் நேரில் சென்று விசாரித்தனர் ஆனால் அவர் அதற்கு முன்னும் பின்ன மாக பதில் அளித்து வந்தார் . ஆகவே இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவர் ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை க்கு சம்பந்தமான இரும்பு பெயர் பலகை பொருளை வாங்கியதாகவும் அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து அவரிடம் இருந்து மீட்டு சென்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக