ஆற்காடுடில் உள்ள அன்னை இந்திரா உமன்ஸ் வெல்பர்அசோசியேசன் வெள்ளி விழா கொண்டாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜூலை, 2026

ஆற்காடுடில் உள்ள அன்னை இந்திரா உமன்ஸ் வெல்பர்அசோசியேசன் வெள்ளி விழா கொண்டாட்டம் !

ஆற்காடுடில் உள்ள அன்னை இந்திரா உமன்ஸ் வெல்பர்அசோசியேசன் வெள்ளி விழா கொண்டாட்டம் !
ராணிப்பேட்டை , ஜூலை 21 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 
செயல்பட்டு வரும் அன்னை இந்திரா உமன்ஸ் வெல்பர்அசோசியேசன் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது இந்தநிகழ்ச்சி சங்கத்தின் சமூகப் பணி களின் ஒரு பகுதியாக  நடைபெறுகிறது. 
பொருளாதாரத்தில் பின்தங்கியகுடும்பங் களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயில ஊக்கமளிக்கும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டது 
இந்த சங்கம் 25ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் நாளில் சிறப்பு விருந்தினராக 
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் S M. சுகுமார் MLA கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினார் அவர் பேசும் போது மகளிர் முன்னேற்றம், 
பெண் கல்வி விழிப்புணர்வு, வேலை வாய்ப்பு முகாம்கள், இலவச கணிணி பயிற்சி, பெண்களுக்கு தையல் பயிற்சி, போன்றவற்றை செய்வ தோடு மட்டு மல்லாமல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து 
ரத்ததான முகாம்களை நடத்தி வருகின் றன இலவச கண் சிகிச்சை முகாம்கள், 
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவற்ற சிறப்பாக இந்த
சங்கம் செயல்பட்டு வருகிறது என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் அன்னை
இந்திரா உமன்ஸ் வெல்பர்அசோசியேசன் நிறுவனர் ஏ எல்.ரவி, அனைவரையும் 
வரவேற்றார் தலைவர் டாக்டர் சுரேஷ், செயலாளர் கோமதி, பொருளாளர்
நிர்மலா மற்றும் பரிமளா, புவனேஸ்வரி, பூங்காவனம், மற்றும் அறங்காவலர்கள் 
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர் மேலும் ஆற்காடு, வாலாஜா, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள்  சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள்  கலந்து கொண்டு 
நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad