கூட்டத்திற்கு மாநில தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கி புதிய பொறுப்பாளர்களை பதவி பிரமாணம் செய்து வைத்தார். பொறியாளர் அருள் செயற்குழு மற்றும் நிர்வாகிகளை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய தலைவராக பொறியாளர் சந்தானம், செயலாளராக பொறியாளர் செல்வகுமார், பொருளாளராக பொறியாளர் கிருபாகரன் பதவி ஏற்றுக்கொண்டனர்.
துணை தலைவராக பொறியாளர் தேவராஜ், துணை செயலாளராக பொறியாளர் மகாலிங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக பொறியாளர் ஜான்சன், சரவணன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் நகர் ஊரமைப்பு துறையில் தொழிற்சாலை சுய சான்று அடிப்படையில் அனுமதி பெறுவது குறித்து திருநெல்வேலி பொறியாளர் இசக்கியப்பன் விளக்கம் அளித்தார்.
Renacon AAC பிளாக் மற்றும் தொடர்பான தகவல்கள் அந்நிறுவன பொறியாளர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட பில்டர்ஸ் தலைவர் பொறியாளர் ராமசாமி, மண்டலம் 10 தலைவர் பொறியாளர் முத்து குமாரசாமி, அதன் செயலாளர் தில்லை நடராஜன், முன்னாள் தலைவர் பொறியாளர் குமரேசன், பொறியாளர் ஹென்றி டேனியல், பொறியாளர் முகமது உஸ்மான் உட்பட பல்வேறு பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை பொறியாளர் குமரேசன் தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மூத்த பொறியாளர்கள், தென்காசி மாவட்ட பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக