முன்னாள் முதல்வர் காமராஜரின் 124வது பிறந்தநாள் முன்னிட்டு குடியாத்தத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜூலை, 2026

முன்னாள் முதல்வர் காமராஜரின் 124வது பிறந்தநாள் முன்னிட்டு குடியாத்தத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் !

முன்னாள் முதல்வர் காமராஜரின் 124வது பிறந்தநாள் முன்னிட்டு குடியாத்தத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் !
குடியாத்தம் ,ஜூலை 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்!" என்ற முழக்கத்தோடு, வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி யில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர், பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் கம் தாகூர், அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரு மான ராஜேஷ்குமார், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், கன்னியாகுமரி மக்கள வை உறுப்பினருமானவிஜய் வசந்த், ஆகி யோர் சிறப்புரையாற்றினர். செங்கம் குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில், 
சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் முனிரத்தினம் வேலூர் மத்திய மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் வாஹித் பாஷா, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் விஜய் இளஞ்செழியன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்  நரேஷ்குமார், திருவண்ணா மலை வடக்கு மாவட்ட தலைவர் பொன் னையன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட  தலைவர் குணசேகரன் கிருஷ் ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், வட்டாரத் தலைவர்கள் வீராங்கன்,சங்கர், தனசேகர், வழக்கறி ஞர் செல்வகுமார், ஜோதி கணேசன், அரோண், நகரத் தலைவர்கள் லாலா லஜபதி, நவீன் குமார் மாவட்ட துணை அணி தலைவர்கள் கோமதி குமரேசன், அன்பரசன், யுவராஜ், ஆம்புலன்ஸ் ராஜேஷ், ராகேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன் குமார் சரவணன் பாபு, விஜயகுமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப் புகள் மற்றும் துறை/பிரிவு நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad