காட்பாடி அருகே விற்பனைக்காக 250 கிராம் கஞ்சா வைத்திருந்த ஜார்க்கண்ட் மாநில இளைஞர் கைது.
காட்பாடி, அக்டோபர் 13 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறைையினர் நேற்று மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பராஸ் மஹால் எனப்படும் தனியார் திருமண மண்டபம் எதிரே, சந்தேகத்திற் கிடமான வகையில் நின்று கொண்டி ருந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரித் தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனை யில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான சுமார் 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என் பவரது மகன் அனிருத் கிரி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பிரம்மபுரம் காவல் நிலை யத்தில் இரண்டு பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட அனிருத் கிரி நீதிமன்ற காவலுக்கு வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக