தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரீராம் சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தின் புதிய கிளையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீராம் சில்க்ஸ் ஜவுளி நிறுவனம், தனது புதிய கிளையை கடந்த 13ஆம் தேதி தேன்கனிக்கோட்டையில் தொடங்கியது. புதிய கிளை தொடக்கத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஸ்ரீராம் சில்க்ஸில் ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம், வாஷிங்மெஷின், எல்.இ.டி. டி.வி., மிக்ஸி மற்றும் பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீராம் குரூப்ஸ் உரிமையாளர்கள் மருத்துவர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் மோகன பிரியா ஆகியோர் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களை வரவேற்று பேசினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இலகுமய்யா, அதிமுக நகர செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினர். மேலும், தொழிலதிபர் ராஜா, பாமக மாவட்ட துணைத் தலைவர் கார்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் அஜித், திமுக மாணவர் அணி அமைப்பாளர் சேகர், அதிமுக நிர்வாகி அபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதில், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த அஜாஸ் மற்றும் கோபாலன்னதொட்டியைச் சேர்ந்த முருகேஸ் ஆகியோருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முனிராஜிக்கு வாஷிங்மெஷினும், சேதன்குமாருக்கு எல்.இ.டி. டி.வி.யும், அந்தேவனபள்ளியைச் சேர்ந்த சின்னம்மாளுக்கு மிக்ஸியும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், தேன்கனிக்கோட்டை மற்றும் பேளாளம் பகுதியைச் சேர்ந்த வினோத், தாவூத்பாஷா ஆகியோருக்கும் மிக்ஸி பரிசு வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த வரலட்சுமி, நிஷாந்தினி மற்றும் மகேஸ்வரி ஆகியோருக்கு பட்டுப்புடவைகள் பரிசாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து, வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், தினமும் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என ஸ்ரீராம் குரூப்ஸ் உரிமையாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், பம்பர் பரிசாக ராயல் என்பீல்டு புல்லட் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் தேன்கனிக்கோட்டையில் புதிய கிளையை தொடங்கியுள்ள ஸ்ரீராம் சில்க்ஸ், தரமான ஜவுளிகளுடன் வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு சிறப்பு பரிசுத் திட்டங்களையும் அறிவித்து தனது வர்த்தகப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக